×

பெண்கள் பாதுகாப்பு திட்டத்தில் 3 நாளில் 60 போன் அழைப்புகள்: டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

ஈரோடு: ஈரோடு, கோபி உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு இன்று காலை ரயில் மூலம் ஈரோடு வந்தார். பின்னர் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறியதாவது: இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக ‘பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால் அவர்கள் இருக்கும் இடத்துக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்துச் செல்லும். அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பெண்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 3 நாட்களில் மட்டும் 60 அழைப்புகள் காவல்துறைக்கு வந்துள்ளது. இவ்வாறு டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறினார்.

The post பெண்கள் பாதுகாப்பு திட்டத்தில் 3 நாளில் 60 போன் அழைப்புகள்: டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : T. ,Sylendra Babu ,Erode ,Tamil Nadu Police D.C. ,Gobi ,GG GP ,Dinakaran ,
× RELATED சென்னையில் திருமணமாகாத செவிலியர்...